பாடசாலை வரலாறும் தற்போதைய நிலையும்


கொக்குவில் ஸ்தான சி.சி .த.க பாடசாலை 1880ஆம் ஆண்டு கொக்குவில் பரிசுத்த கிறிஸ்துவ ஆலயத்தால் அங்கலிக்கன் மத போதகர் வணக்கத்துக்கு உரிய சம்பியன் அடிகளால் ஆரம்பிக்க பட்ட பாடசாலை ஆகும் Read More
இந்த பாடசாலைஆனது j/124கிராம சேவகர் பிரிவில் காங்கேசன்துறை வீதியில்(K.k.s Road)அமைந்துள்ளது. இந்த பாடசாலையில் மாணவர்கள் தரம் 1 தொடக்கம் தரம் 5வரை 73 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
 இவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆகும் பல உடல் உள பிரைச்சனைகள் உள்ள மற்றும் விசேட தேவை உள்ள பிள்ளைகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பாடசாலையில் தரமான கல்வி வழங்குவதன் மூலமும் பெற்றோர் பாதுகாவலர்களின் விழிப்புணர்வும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகின்றது பாடசாலையின் பல்வேறு தேவைகள் சமூக பங்களிப்பின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் உணவு வழங்கல் ஆனது உலக உணவு திட்டம்,ஒரு பானை உணவுத்திட்டம்,Yarl petoleum போன்றோரின் உதவியினால் சிறந்த சத்துணவு திட்டமாக நடைபெறுகின்றது 
2008தொடக்கம் அனைத்து மாணவர்களை உள்ளடக்கிய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி மற்றும் கால் கோள் விழா,தைப்பொங்கல்,ஆசிரியர் தினம் என்பனவும்
2011 இல் சிறப்பாக பரிசளிப்பு விழா உம் நடை பெற்றது 
2011இல் பாடசாலையில் கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் கொக்குவில் மேற்கை சேர்ந்த தேவசகாயம் நடனகுமார் அனுசரணையில் இரத்தின சபாபதி பவளம் சுப்பிரமணியம் என்பவரின் ஆரம்ப வைப்புடன் ஆரம்பிக்க பட்டுள்ளது இதன் வட்டி பல்கலைகழக மக்கள் வங்கி கிளையில் வைப்பில் இடப்பட்டு உள்ளது 

Post a Comment

  © Design By YarlTec powered by Kokuvil Station C.C.T.M.School 2012

Back to TOP